குமாரபாளையம்: மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகைப் பொருள் வழங்கிய போலீசார்

குமாரபாளையத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, காவல்துறை சார்பில், மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், எம்ஜிஆர் நகர் பகுதியில் பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, கொரோனா கால நிவாரணமாக காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அவ்வகையில், குமாரபாளையம் காவல் ஆய்வாளர் ரவி மற்றும் வருவாய் துறையினர் இணைந்து, அரிசி,பருப்பு,எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பினை, மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று வழங்கினர். காவல்துறையினரின் மனிதநேயம்மிக்க இச்செயலை, அவர்கள் நன்றியோடு பாராட்டினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!