பெண்களை ஆபாச படமெடுத்தவரை போக்சோவில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை ஊராட்சி வி.மேட்டூர் பகுதியில் பெண்களையும் குழந்தைகளையும் ஆபாசமாக சித்தரித்த முருகேசன் என்பவரை போச்சோ சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்திட கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெண்களை ஆபாச படமெடுத்தவரை போக்சொவில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை ஊராட்சி வி.மேட்டூர் பகுதியில் பெண்களையும் குழந்தைகளையும் ஆபாசமாக சித்தரித்த முருகேசன் என்பவரை போக்சோ சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை ஊராட்சி வி. மேட்டூர் பகுதியில் குழந்தைகள் மற்றும் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட முருகேசன் என்பவனை கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறை கைது செய்து உள்ளது.
இந்நிலையில் முருகேசன் என்பவர் மீது போடப்பட்டுள்ள வழக்கானது மிகவும் சாதாரண வழக்காக உள்ளது. மேலும் குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பிவிடும் நிலையில் உள்ளது. மேலும் இவ்வளவு பெரிய குற்ற பின்னணிகளுக்கு பின்னால் ஒரு கும்பல் செயல்பட்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் வலுவாக உள்ளது.
எனவே, வி. மேட்டூர் பகுதியில் உள்ள பெண்களும் பொதுமக்களும், சமூக செயல்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டுள்ள முருகேசன் என்பவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், இந்த வழக்கை முழுமையாக தீர விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியும் அவனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கல்லங்காட்டுவலசில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெருமாள், சமூக செயல்பாட்டாளரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன், வி மேட்டூர் பகுதியை சேர்ந்த முருகன், பழனிச்சாமி, செங்கோடன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்தால் கடுமையான தண்டனை வழங்க சட்டங்கள் வழிகாட்டி இருக்கும்போது, போலீசார் தவறு செய்தவர்களை கடுமையான தண்டனைக்கு உட்படுத்தவேண்டும். அதிலும் குறிப்பாக குழந்தைகளை ஆபாசமாக சித்தரித்து இருந்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவன்மீது கடுமையான சட்டம் பாயவேண்டும். அதை போலீசார்மட்டுமே உறுதி செய்து தமிழக காவல்துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும். மக்கள் தமிழக காவல்துறைமீது வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்த பெண்களை அவதூறாக சித்தரித்தவன் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu