மதுவிலக்கு போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

மதுவிலக்கு போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில்   8 கிலோ கஞ்சா பறிமுதல்

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்டவர்கள்.

குமாரபாளையத்தில் திருச்செங்கோடு மதுவிலக்கு போலீசார் அதிரடி வேட்டையில் 8 கிலோ கஞ்சா பறிமுதல். செய்யப்பட்டது.

குமாரபாளையத்தில் திருச்செங்கோடு மதுவிலக்கு போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

குமாரபாளையம் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் திருச்செங்கோடு மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது, ஸ்கூட்டி வாகனத்தில் வந்த இருவர், போலீசாரைக் கண்டதும் இரண்டு சக்கர வாகனத்தினை திருப்பிச் செல்ல முற்பட்டனர். இதனைக் கண்ட மதுவிலக்கு எஸ்.ஐ. சங்கீதா மற்றும் போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். வாகனத்தில் இருந்த மூட்டையை பிரித்துப் பார்த்த பொழுது, அதில் கஞ்சா 8 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், போலீசார் அவர்களை விசாரணை மேற்கொண்ட பொழுது, ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த பிரபல ரவுடி டேவிட் (வயது27) என்றும் அவரோடு வந்த பெண் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த கௌரி,(25,) என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்த 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் அவர்கள் எங்கிருந்து கொண்டு வந்தார்கள்? என விசாரித்த பொழுது, ஈரோடு ரயில்வே நிலையத்தில் வட மாநில இளைஞரிடம் இருந்து பெற்று குமாரபாளையத்தில் உள்ள விஜய் என்பவருக்கு விற்பனை செய்ய வந்தது தெரிய வந்தது. வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், குமாரபாளையம் பகுதியில் தலைமறைவாக உள்ள, கஞ்சா வியாபாரி விஜய் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
Similar Posts
‘கடமை’க்கு நடந்த பேரிடர்  மீட்பு செயல்விளக்க முகாம்!
மதுவிலக்கு போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில்   8 கிலோ கஞ்சா பறிமுதல்
3 கிலோ கஞ்சா பறிமுதல்; குமாரபாளையத்தில் இருவர்   கைது
1 இல்ல இனி 3..! யூடியூப்பில் அதிரடி மாற்றம்..! கொண்டாட்டம்தான்..!
புது ஃபோன் வாங்க போறீங்களா? இந்த மாசம் இதெல்லாம் ரிலீஸாகுது பாத்துட்டு வாங்குங்க..!
கமல் பிறந்தநாளில் தக் லைஃப் டிரைலர்! விரைவில் அறிவிப்பு..!
தமிழக நியாயவிலைக் கடைகளில் 2000 வேலைவாய்ப்புகள்! உடனே அப்ளை பண்ணுங்க..!
இன்று வெளியாகும் விடாமுயற்சி அப்டேட்..?
KH237 கன்பாஃர்ம்...! எப்ப தொடங்குது தெரியுமா? நல்ல சேதி சொன்ன அன்பறிவ் மாஸ்டர்கள்..!
நவராத்திரி விழா; குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு!
அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் அஜித்குமார் திரைப்படங்கள்..! முதல்ல எது தெரியுமா?
சிகிச்சைக்கு பின் பணிக்கு திரும்பிய இன்ஸ்பெக்டருக்கு உற்சாக வரவேற்பு
தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் மனித சங்கிலி போராட்டம்