தனியார் கல்லூரி மாணவர்கள் அடிதடி தகராறு: இரு மாணவர்கள் கைது; பலர் தலைமறைவு
குமாரபாளையம் காவல் நிலையம்.
குமாரபாளையம் அருகே தனியார் கல்லூரி மாணவர்களின் அடிதடி தகராறில் மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றவர்கள் தலைமறைவாகினர்.
இதுகுறித்து விடுதி வார்டன் மற்றும் உதவி பேராசிரியர் சென்னிமலை நித்தியானந்த், 30, குமாரபாளையம் போலீசில் புகாரளித்துள்ளனர். இதில் குமாரபாளையம் தனியார் கல்லூரியில் பி.இ., 3ம் ஆண்டு படித்து வருபவர்கள் கடலூர் தமிழரசன், 21, திருப்பத்தூர், சூர்யா, 20, கள்ளக்குறிச்சி ரஞ்சித்குமார், 21.
இதில் தமிழரசன் மற்றும் பயோ மெடிக்கல் மாணவர் சந்ரு இருவரும் சாப்பிடும் போது ஒருவரையொருவர் முறைத்து பார்த்துக்கொண்டு இருந்ததால் அடிக்கடி வாய்ச்சண்டை வரும். சந்ருக்கு கோவம் வந்து, அதே கல்லூரியில் தினமும் வீட்டில் இருந்து வந்து அக்ரி இரண்டாம் ஆண்டு படித்து வரும் கோகுல்வசந்த், 21 என்பவரிடம் சந்ரு சொல்ல, மார்ச் 21 மாலை 05:00 மணிக்கு கல்லூரி முடிந்து விடுதி மாணவர்கள் விடுதிக்கு வந்தனர்.
அப்போது சந்ரு, கோகுல்வசந்த், தீபன்ராஜ், சுவேதன், பூபதி, ஆகியோர் தமிழரசன், சூர்யா, ரஞ்சித்குமார் ஆகிய மூவரை பார்த்து, தகாத வார்த்தை பேசி, வெளியூரில் இருந்து வந்தவங்க நீங்க, நாங்க உள்ளூர்க்காரங்க, எங்க கிட்ட வெச்சுக்காதீங்க, சந்துரு எங்க நண்பன், அவனிடம் ஏதும் வெச்சுக்காதீங்க, என்று கூறி, கைகளாலும், கோகுல்வசந்த் அருகில் இருந்த கிரிக்கெட் பேட் எடுத்து, மூவரையும் அடித்தார். அனைவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன்.
அதே நாளில் மீண்டும் மாலை 06:45 மணியளவில் கல்லூரி நுழைவுப்பகுதி பிள்ளையார் கோவில் அருகே நின்ற தமிழரசன், சூர்யா, ரஞ்சித்குமார் ஆகிய மூவரையும் சந்ரு, தீபன்ராஜ், சுவேதன் மற்றும் சில நண்பர்கள் கைகளால் மீண்டும் அடித்து, கொன்றால்தான் சரி வரும் என மிரட்டல் விடுத்தனர். கோகுல்வசந்த், தீபன்ராஜ் இருவர் மீதும் மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
கோகுல்வசந்த், தீபன்ராஜ் இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் சந்ரு, சுவேதன், பூபதி மற்றும் சிலர் தப்பியோடினர். இது குறித்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu