குமாரபாளையம் அருகே தனியார் பஸ், டூவீலர் மோதல்: விபத்தில் ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

குமாரபாளையம் அருகே தனியார் பஸ், டூவீலர் மோதல்: விபத்தில் ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்
X
குமாரபாளையம் அருகே தனியார் பஸ், டூவீலர் மோதிய விபத்தில் ஒருவர் பலியானதுடன் ஒருவர் படுகாயமடைந்தார்.

குமாரபாளையம் அருகே ஆட்டையாம்பட்டியை சேர்ந்த சீனிவாசன் (39), ராமலிங்கம் (60) இருவரும் உறவினர்கள். இவர்கள் தங்களது டூவீலரில் சீனிவாசன் பவானி அருகே குல தெய்வம் கோவிலுக்கு சென்று விட்டு நேற்று மாலை 5 மணியளவில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, பல்லக்காபாளையம் தனியார் கல்லூரி எதிரில் பிரிவு சாலையில், பவானியில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் இவர்கள் வந்த டூவீலர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இதில் ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே பலியானார். சீனிவாசன் பலத்த காயங்களுடன் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் பஸ் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!