குமாரபாளையத்தில் அச்சு பிணைப்பு தொழிலளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பைல் படம்.
குமாரபாளையத்தில் அச்சு பிணைக்கும் தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது குறித்து சிறப்பு அழைப்பாளர்கள் சி.பி.ஐ. நகர செயலர் கணேஷ்குமார், ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாவட்ட பொது செயலர் சுப்ரமணி கூறுகையில், மின்சாரத்துறை மூலம் விசைத்தறி உரிமையாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. பாவு பிணைப்பதற்கு நாட்டிங் மெசின் செயல்பட இலவச மின்சாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.
இதனை நம்பி வாழ்ந்து வரும் மலுக்கு அச்சு பிணைக்கும் தொழிலாளர்கள் பெரும்பாலோர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. நாட்டிங் மெசின் கொண்டு வர, காலாவதியான கார்களை கொண்டு வருகிறார்கள். இது போன்ற கார்களை பறிமுதல் செய்ய வேண்டும். மலுக்கு அச்சு பினைப்போர் வாழ்வாதாரம் காத்திட கோரி மலுக்கு அச்சு பிணைப்பு தொழிலளர்கள் சங்க கூட்டியக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் சங்க தலைவர் மனோகரன் தலைமையில் வாரச்சந்தை முன்பு நடைபெற்றது.
கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், செல்வராஜ், செல்வம், ராஜு, பசுபதி, சுரேஷ், தண்டபாணி, ஜெகதீஸ்வரன், கந்தசாமி, லோகநாதன் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த கோரிக்கை குறித்து தாசில்தார் தமிழரசி, மின்வாரிய உதவி சீனிவாசன், வட்டார போக்குவரத்து அலுவலக மேற்பார்வையாளர் சக்திவேல் ஆகியோரிடம் கோரிக்கைகள் குறித்து மனு வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu