அரசு பள்ளி மாணவர்களின் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி..!

அரசு பள்ளி மாணவர்களின் போதை   தடுப்பு விழிப்புணர்வு பேரணி..!
X

போதைப் பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணியை இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

குமாரபாளையம் அரசு பள்ளி சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

குமாரபாளையம் அரசு பள்ளி சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

நாமக்கல் மாவட்டத்தை போதை பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்க நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆணையின்படி மாவட்ட மதுவிலக்கு காவல்துறை மற்றும் காவல்துறையினர் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போதை சாக்லேட், போலி மதுபான பாட்டில்கள் மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்து வருகின்றனர். போதைப் பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடந்தது. மேலும் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி தலைமையாசிரியர் ஆடலரசு, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் பலர் பங்கேற்றனர்.

எதிர்கால இளைய சமூகத்தை போதை பழக்கங்களில் இருந்து மீட்டெடுக்கவேண்டும் என்பதும், எதிர்கால தலைமுறையினர் போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது என்றும், போதைப்பழக்காத்தால் ஏற்படும் விளைவுகள், உடல் ரீதியிலான பாதிப்புகளை மாணவர்கள் மூலமாக கொண்டுசெல்ல வேண்டும். மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

குறிப்பாக பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி இளம் வயதிலேயே தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துவிடக் கூடாது என்று தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைப்பொருட்கள் கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!