/* */

பெண் பயணிகளை பேருந்தில் ஏறவிடாமல் தடுப்பு: வீடியோ வைரலானதால் அதிகாரிகள் ஆறுதல்

பெண் பயணிகளை பேருந்தில் ஏறவிடாமல் தடுப்பு: வீடியோ வைரலானதால் அதிகாரிகள் நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

பெண் பயணிகளை பேருந்தில் ஏறவிடாமல் தடுப்பு: வீடியோ வைரலானதால் அதிகாரிகள் ஆறுதல்
X

குமாரபாளையத்தில் பெண் பயணிகளை அரசு பஸ்களில் ஏறவிடாமல் தடுக்கும் கண்டக்டர்களின் செயல்களை கண்டு ஆதங்கப்பட்ட காளிதேவிக்கு பள்ளிபாளையம் போக்குவரத்து அலுவலக நேர காப்பாளர் வெங்கடாசலம் நேரில் ஆறுதல் கூறினர்.

குமாரபாளையத்தில் பெண் பயணிகளை அரசு பஸ்களில் ஏறவிடாமல் தடுக்கும் நடத்துனர்களின் செயல்களை கண்டு ஆதங்கப்பட்டு, சமூக வலை தளங்களில் பகிரப்பட்ட பெண்ணின் வீடியோவால் போக்குவரத்து அலுவலர்கள் போன் மூலமும் மற்றும் நேரிலும் ஆறுதல் கூறினர்.

இதுகுறித்து குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலையில் எம்.ஜி.ஆர்.நகர் பஸ் நிறுத்தம் அருகே பேன்சி ஸ்டோர் நடத்தி வரும் காளிதேவி, 28. கூறுகையில், இந்த பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நின்றதும் பெண் பயணிகள் ஏற முயற்சித்தனர். அவர்களை ஏற்ற முடியாது என்று கூறி, பஸ்ஸை இயக்கி சென்றனர்.

இது போல் பல முறை நடந்துள்ளதாக ஏராளமானோர் என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆகவே இது குறித்து ஆத்திரமடைந்து அரசு பஸ் நடத்துனர்களிடம் கேட்டதற்கு, டெப்போவிற்கு போய் புகார் சொல்லுங்கள் என ஏளனமாக தெரிவித்தனர். செய்வதறியாது, நானே வீடியோ எடுத்து அதை சமூக வலை தளங்களில் பகிர்ந்தேன். இந்த வீடியோவுக்கு பலரும் நான் கேட்டது சரி என்று ஆதரவு தெரிவித்தனர்.

இதனை கண்ட நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம், இது குறித்து பள்ளிபாளையம் போக்குவரத்து பணிமனை அலுவலர் வடிவேலுவிடம் தெரிவித்தார். அவர் நேர காப்பாளர் வெங்கடாசலத்திற்கு தெரிவிக்க, அவர் என்னை நேரில் சந்தித்து இனி இது போல் நடக்காது; அவ்வாறு நடக்கும் ஓட்டுனர், நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியுடன் தெரிவித்ததாக அவர் கூறினார்.

அப்போது தி.மு.க. நிர்வாகிகள் ரவி, கந்தசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 5 Jan 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  2. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  5. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  6. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  7. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  10. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!