பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரம்

பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரம்
X

குமாரபாளையத்தில் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குமாரபாளையத்தில் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குமாரபாளையத்தில் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குமாரபாளையத்தில் தம்மண்ணன் வீதி பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஆக. 19ல் யாகசாலை கால்கோள் விழாவுடன் துவங்கியது. ஆக. 29 முளைப்பாரி இடுதல், செப். 5ல் யானை, ஒட்டகம், குதிரையுடன் காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம், செப். 6,7,8ல் யாக சாலை பூஜைகள், செப். 8 காலை 09:00 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.

பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்படுகிறது. கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மழை சாந்த மல்லிகார்ஜுன சுவாமிகள், சாலுரு புருஹன் மாதா, தொழிலதிபர்கள் சிவசக்தி சண்முகசுந்தரம், சிவசக்தி தனசேகரன், சேர்மன் விஜய்கண்ணன், தொழிலதிபர் பழனிசாமி, நாட்டாண்மைக்காரர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவிற்கு பந்தல் அமைக்கும் பணிகள், யாக சாலை பணிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!