குமாரபாளையம், பவானி பகுதிகளில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

குமாரபாளையம், பவானி பகுதிகளில் பிரதோஷ  சிறப்பு வழிபாடு
X

பிரதோஷ தினத்தை முன்னிட்டு, பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், நந்தி பகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

பிரதோஷ தினத்தையொட்டி, குமாரபாளையம், பவானி பகுதி சிவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பிரதோஷ நாளை முன்னிட்டு, குமாரபாளையம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதைபோல், குமாரபாளையம் கோட்டைமேடு கைலாசநாதர் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில், ஸ்ரீ அங்காளம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில், கள்ளிபாளையம் சிவன் கோவில், தேவூர் ஆத்மலிங்கேஸ்வரர் கோவில், பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில், வேதகிரீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், அங்காளம்மன் கோவில் உள்ளிட்ட பல சிவாலயங்களில், சுவாமிக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

எனினும், கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பக்தர்கள், கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கோவிலுக்கு வெளியில் இருந்தவாறே தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!