விசைத்தறி தொழில் மேம்பட 50 கோடி ஒதுக்கீடு செய்த அரசுக்கு விசைத்தறி சம்மேளனம் பாராட்டு

விசைத்தறி தொழில் மேம்பட 50 கோடி ஒதுக்கீடு செய்த அரசுக்கு விசைத்தறி சம்மேளனம் பாராட்டு
X
விசைத்தறி தொழில் மேம்பட 50 கோடி ஒதுக்கீடு செய்த அரசுக்கு விசைத்தறி சம்மேளனம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

விசைத்தறி தொழில் மேம்பட 50 கோடி ஒதுக்கீடு செய்த அரசுக்கு விசைத்தறி சம்மேளனம் பாராட்டு

விசைத்தறி தொழில் மேம்பட 50 கோடி ஒதுக்கீடு செய்த அரசுக்கு விசைத்தறி சம்மேளனம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இது பற்றி தமிழ்நாடு விசைத்தறி சம்மேளன தலைவர் மதிவாணன் கூறியதாவது:

தமிழக அரசு சார்பில் நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில் விசைத்தறி தொழில் மேம்பட 50 கோடி ஒதுக்கீடு செய்தமைக்கு எங்கள் தமிழ்நாடு விசைத்தறி சம்மேளனம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த தொழிலை நம்பி பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். வரும் காலங்களில் மேலும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, விசைத்தறி தொழில் மேம்பட உதவ வேண்டுகிறோம். பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். ஏனெனில், ஜவுளி உற்பத்திக்கு நமக்கே பருத்தி இன்னும் தேவைப்படும் போது, இதனை ஏற்றுமதி செய்தால், நமக்கு பற்றாகுறை ஏற்படும். இதற்கு பதிலாக, பருத்தியை நூலாக்கி, ஆடையாக நெய்து, அதனை ஏற்றுமதி செய்தால், தொழில் வளம் பெருகும். பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசு பள்ளிகளில் நவீன தொழிநுட்ப கல்வி கொண்டுவருவது மகிழ்ச்சி. அனைத்து நாடுகளில் தமிழ் இலக்கியம் உள்ளிட்ட கலாச்சார புத்தகங்கள் விற்பனை மையம் அமைக்கவிருப்பது சிறப்பு.

இவ்வாறு அவர் பேசினார்.

படவிளக்கம் :

மதிவாணன், தலைவர், தமிழ்நாடு விசைத்தறி சம்மேளனம், குமாரபாளையம்.

Next Story