குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளி மாயம்: போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளி மாயம்: போலீசார் விசாரணை
X

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன்.

குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளி மாயமானார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம் கொண்டலாம்பட்டியில் வசிப்பவர் ராஜா, 55. விசைத்தறி தொழிலாளி. இவர் குமாரபாளையம் கே.ஒ.என். தியேட்டர் புறவழிச்சாலை அருகே வசிக்கும் தன் தாயார் தனபாக்கியம் வீட்டிற்கு நவ. 8ல் வந்தார். நவ. 12ல் சேலம் செல்வதாக கூறி, அன்று மாலை 06:30 மணிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால், இதுவரை ராஜா சேலம் வீட்டிற்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தாயார் தனபாக்கியம் குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இதன்படி, காணாமல் போன ராஜாவை, போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!