வெப்படையில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்: மின்வாரியம் அறிவிப்பு

வெப்படையில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்: மின்வாரியம் அறிவிப்பு
X

பைல் படம்.

வெப்படையில் செப். 15ல் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

வெப்படையில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக செப்டம்பர் 15ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் வாசுதேவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்படை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறுகிறது.

இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வெப்படை, பாதரை, பாதரை-இந்திரா நகர், ரங்கனூர் நால்ரோடு, புதுப்பாளையம், எலந்தகுட்டை, தாண்டான்காடு, காந்திநகர், சின்னார்பாளையம், ஈ.காட்டூர், புது மண்டபத்தூர், தெற்குபாளையம், மாதேஸ்வரன் கோவில், வெடியரசம்பாளையம், செம்பாரைக்காடு, சின்னாக்கவுண்டம்பாளையம், களியனூர், மாம்பாளையம், மோளக்கவுண்டம்பாளையம், மற்றும் எளையாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!