சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் செப்.18ம் தேதி மின் நிறுத்தம்
X
பைல் படம்.
By - K.S.Balakumaran, Reporter |14 Sept 2021 7:15 PM IST
குமாரபாளையம் சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் வரும் செப்.18ம் தேதி மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் வாசுதேவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
குமாரபாளையம் அருகே சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி செப்.18 ம் தேதி நடக்கவிருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை சமயசங்கிலி, சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், கலியனூர், கோட்டைமேடு, எம்.ஜி.ஆர். நகர், சில்லாங்காடு, ஆவத்திபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் மற்றும் ஓட்டமெத்தை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu