பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் நவ .14ல் மின்சாரம் நிறுத்தம்
பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் நவ . 14ம்தேதி மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானம் கழகத்தின் பள்ளிபாளையம் பகுதி செயற்பொறியாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் நவ. 14ல் (செவ்வாய்க்கிழமை) காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக குமாரபாளையம் நகரம், கோட்டைமேடு, மேட்டுக்கடை, கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி, சத்யா நகர், வேமன் காட்டுவலசு,கோட்டைமேடு, சாமியம்பாளையம், டி.வி.நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, கல்லங்காட்டுவலசு மற்றும் வளையக்காரனூர்,கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இதே போல் அதே நாளில், அதே நேரத்தில் பள்ளிபாளையம் பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்கு மின் விநோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம், வெடியரசம்பாளையம், வெள்ளிக்குட்டை, அண்ணாநகர், காடச்சநல்லூர், தாஜ் நகர், ஆயக்காட்டூர், காவேரி ஆர்.எஸ்., ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை, பட்லூர், மற்றும் இறையமங்கலம் ஆகிய பகுதிகளில் நவ. 14ல் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu