குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் நவ.23, 24-ல் மின்சாரம் நிறுத்தம்

குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் நவ.23, 24-ல் மின்சாரம் நிறுத்தம்
X
குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் நவ.23 மற்றும் 24ல் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

குமாரபாளையம், பள்ளிபாளையம், சமயசங்கிலி,ஆனங்கூர் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையத்தில் நவ.23ல் மாதாந்திர பராமரிப்பு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பள்ளிபாளையம் பகுதி செயற்பொறியாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நவ.23ல் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை குமாரபாளையம் நகரம், கோட்டைமேடு, மேட்டுக்கடை, கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி, சத்யா நகர், வேமன் காட்டுவலசு,கோட்டைமேடு, சாமியம்பாளையம், டி.வி.நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, கல்லங்காட்டுவலசு மற்றும் வளையக்காரனூர்,கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், 23கொடாரபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.,

இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதே போல் பள்ளிபாளையத்திலும் நவ.23ல் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இது குறித்து செயற்பொறியாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பள்ளிபாளையம், வெடியரசம்பாளையம், வரப்பாளையம், வெள்ளிக்குட்டை, ஆவாரங்காடு, அலமேடு, புதுப்பாளையம், ஆலாம்பாளையம், எஸ்.பி.பி.காலனி, அண்ணா நகர், தாஜ் நகர், ஆயக்காட்டூர், காவேரி ஆர்.எஸ்., ஒடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்காராயன்பேட்டை, பட்லூர், இறையமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில்காலை 09:00 முதல் 02:00 வரை மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நவ. 24ல் சமயசங்கிலி பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நவ. 24ம்தேதி காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை

சமயசங்கிலி, சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், களியனூர், கோட்டைமேடு, எம்.ஜி.ஆர். நகர், சில்லாங்காடு, ஆவத்திபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஓட்டமெத்தை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிராமண பெரிய அக்ரஹாரம், சக்தி ரோடு அக்ரஹாரம், பவானி மெயின் ரோடு, காமராஜ் நகர், வைராபாளையம், வாட்டர் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் விடுத்துள்ள இன்னொரு அறிக்கையில் ஆனங்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நவ. 24ல் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை தோக்கவாடி, வரப்பாளையம், கே.எஸ்.ஆர்.கல்வி நகர், தட்சன்காட்டுபாளையம், காடச்சநல்லூர், குப்பிச்சிபாளையம், வேலாத்தாள் கோவில், டி.ஜி.பாளையம், பள்ளிக்கவுண்டம்பாளையம், ஆனங்கூர், சின்ன ஆனங்கூர், பழையபாளையம், புளியம்பட்டியாம்பாளையம், ஆண்டிக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தி வைக்கபடுகிறது.

இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி