குமாரபாளையத்தில் 6ம் தேதி மின் நிறுத்தம்

குமாரபாளையத்தில் 6ம் தேதி மின் நிறுத்தம்
X
பைல் படம்
குமாரபாளையத்தில் 6ம் தேதி பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

குமாரபாளையம் அருகே அக். 6ல் சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி செய்யப்படுகிறது. இதனையொட்டி அன்று மின் நிறுத்தம் செய்யபடுகிறது. இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் வாசுதேவன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.

சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் அக். 6ல் காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதுசமயம் சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், கலியனூர், கோட்டைமேடு, எம்.ஜி.ஆர். நகர், சில்லாங்காடு, ஆவத்திபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஓட்டமெத்தை ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story