பகலில் பல மணி நேரம் மின் தடை பொதுமக்கள், வியாபாரிகள் தவிப்பு

குமாரபாளையத்தில் பகலில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் தவிப்புக்கு ஆளாகினர்.

பகலில் பல மணி நேரம் மின் தடை

பொதுமக்கள், வியாபாரிகள் தவிப்பு


குமாரபாளையத்தில் பகலில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் தவிப்புக்கு ஆளாகினர்.

குமாரபாளையம் நகரில் பலமுறை பகலில் மின் தடை ஏற்பட்டது. கடும் வெயிலால் ஏற்கனவே அல்லல் படும் வயதானவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு, அடிக்கடி ஏற்படும் மின் தடையால் மேலும், மேலும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். மேலும் வியாபாரிகள் பலரும் , கடும் வெயிலால் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். எந்தவொரு தொழிலுக்கும் மின்சாரம் அவசியம் என்பதால், அடிக்கை ஏற்படும் மின்வெட்டால், இவர்களது வாழ்க்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. விசைத்தறி, கைத்தறி ஜவுளி உற்பத்தியும் இதனால் பாதிக்கப்படுகிறது. தொழிலாளர்களும் வருமான இழப்பை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.

Next Story
ai automation digital future