ஆக. 20ம் தேதி பல்லக்காபாளையம் பகுதிக்கு மின் நிறுத்த அறிவிப்பு..!

ஆக. 20ம் தேதி  பல்லக்காபாளையம் பகுதிக்கு  மின் நிறுத்த அறிவிப்பு..!
X

பைல் படம் : 20ம் தேதி மின்சாரத்தடை அறிவிப்பு

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ஆக. 20ல் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

ஆக. 20ல் பல்லக்காபாளையம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு மின் நிறுத்தம்

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ஆக. 20ல் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இது பற்றி பள்ளிபாளையம் மின் வாரிய செயற்பொறியாளர் செல்வம் தமது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ஆக. 20ல் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர், புதுப்பாளையம், மலையடிபாளையம், மஞ்சுபாளையம், எக்ஸல் கல்லூரி, குமாரபாளையம் ஹைடெக் பார்க் மற்றும் காவேரி ஹைடெக் பார்க் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் மின் பாதைகள் மற்றும் மின்மாற்றிகள் போன்றவைகளை பராமரிப்பு செய்வது மின்துறையின் ஒரு வழக்கமான பணியாகும். அதனால் இந்த மாதம் 20ம் தேதி செவ்வாய்க்கிழமை பல்லக்காபாளையம் பகுதி துணைமின் நிலைய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது. அதனால் பொதுமக்கள் மின் தடை அறிவிப்பை அறிந்து அதற்கேற்ப வீட்டு வேலைகளை திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது