அக்.11ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்..!

அக்.11ம் தேதி  மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்..!
X

பைல் படம்

அக்.11ம் தேதி நடக்கவுள்ள மின் நுகர்வோர் குறை தீர் நாள் கூட்டத்தில் மின் தொடர்பான தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்ககிரி கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அக்.11ல் நடைபெறவுள்ளது.

இது குறித்து சங்ககிரி செயற்பொறியாளர் உமாராணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், மேட்டூர் மின் பகிர்மான வட்டம், சங்ககிரி கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அக்.11ல் காலை 11:00 மணி முதல் 01:00 மணி வரை, செயற்பொறியாளர், மின்வாரிய அலுவலகம்,சங்ககிரி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. சங்ககிரி கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி மின் தடை பொதுமக்கள் தவிப்பு

குமாரபாளையத்தில் அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்தடையால் ஜவுளி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

மாநில அளவில் முதன் முதலாக குமாரபாளையம் நகராட்சியில் புதைவட மின் கம்பிகள் அமைக்கப்பட்டன. இதன் சோதனை ஓட்டம் என்ற பெயரில் நகரில் அடிக்கடி மின்தடை செய்கிறார்கள். இதனால் ஜவுளி உற்பத்தி பெரிதும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறது. விசைத்தறி தொழிலாளர்கள் வருமானம் இழக்கும் நிலை ஏற்படுகிறது.

மேலும் பல்வேறு வியாபார நிறுவனத்தார் தங்கள் வியாபாரம் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் பெரிதும் பாதிக்கப்படுகிறது என புகார் கூறி வருகின்றனர். நேற்று மாலை 02:00 மணி முதல் 05:00 மணி வரை மூன்று முறை மின் தடை ஏற்பட்டு சுமார் இரண்டரை மணி நேரம் மின் வினியோகம் இல்லாத நிலை ஏற்பட்டது. வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தொடர் மின்வெட்டால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். குமாரபாளையம் மின்வாரிய அலுவலக நடவடிக்கையால் பொதுமக்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகினர்.

இந்த மின்தடை குறைகளையும் மின் நுகர்வோர் கூட்டத்தில் தெரிவிக்க முடிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!