மின் கட்டண உயர்வு கண்டித்து விசைத்தறி வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

மின் கட்டண உயர்வு கண்டித்து விசைத்தறி வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
X

குமாரபாளையத்தில் மின் கட்டண உயர்வு கண்டித்து நடைபெறவிருந்த விசைத்தறி வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்படுவது குறித்த செயற்குழு ஆலோசனை கூட்டத்தில் கொங்கு பவர்லூம்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் பேசினார்.

குமாரபாளையத்தில் மின் கட்டண உயர்வு கண்டித்து நடைபெறவிருந்த விசைத்தறி வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.

குமாரபாளையம் கொங்கு பவர்லூம்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. குமாரபாளையத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து செப் 27 முதல் கொங்கு விசைத்தறிகள் சங்கத்தார் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்திருந்தனர்.

இது குறித்து சங்கமேஸ்வரன் கூறுகையில், கோவை மாவட்ட விசைத்தறி சங்கத்தார் மின்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கேட்டுக்கொண்டனர். அதற்கு விசைத்தறி சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு பொறுத்திருங்கள். முதல்வரிடம் பேசி நல்லதொரு பதிலை சொல்கிறேன் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதால், அவர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

அதே போல் அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க நாங்களும் மின் கட்டண உயர்வினை கண்டித்து 27ல் தொடங்கவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்தி வைக்கிறோம். எங்களுடன் கொங்கு மண்டல முறுக்கு நூல் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரும் ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!