அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவர் சேர்க்கை

அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவர் சேர்க்கை
X

பைல் படம்.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

இது பற்றி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரேணுகா விடுத்துள்ள அறிக்கையில், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021 - 2022 கல்வியாண்டிற்கு எம்.ஏ.தமிழ், ஆங்கிலம், எம்..காம்., வணிகவியல், எம்.எஸ்.சி. கணிதம், எம்.எஸ்.சி. கணினி அறிவியல் ஆகிய முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கைக்கு செப். 16 வரை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

இக்கல்லூரியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் ஸ்மார்ட் போன் அல்லது மடிகணினி மூலம் வீட்டிலிருந்து www.tngasapg.in என்ற முகவரியில் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் உடனே அசல் சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு நேரில் வந்து கல்லூரியில் செயல்பட்டு வரும் கல்லூரி சேர்க்கை உதவி மையத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!