பூட்டிய கடைக்குள் பாய்ந்த தனியார் பஸ்

பூட்டிய கடைக்குள் பாய்ந்த தனியார் பஸ்
X

பள்ளிபாளையம் அருகே பூட்டிய கடைக்குள் பாய்ந்த தனியார் பஸ்.

பள்ளிபாளையம் அருகே பூட்டிய கடைக்குள் தனியார் பஸ் பாய்ந்தது.

ஈரோட்டில் இருந்து ஓமலூர் நோக்கி தனியார் பஸ் ஒன்று பள்ளிபாளையத்தை கடந்து வந்து கொண்டிருந்தது. அப்போது குறுக்கே வந்த டூவீலர் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பஸ்ஸை டிவைடர் வளைவில் திருப்ப முற்பட்டபோது, பூட்டப்பட்ட மளிகை கடைக்குள் பாய்ந்தது. இந்த விபத்தால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இது குறித்து வெப்படை போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். பஸ் கடைக்குள் பாய்ந்தது என்று அறிந்ததும் பொதுமக்கள் பெருமளவில் திரண்டு பார்த்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!