வக்கிரகாளியம்மன் கோயிலில் பவுர்ணமி ஜோதி வழிபாடு

வக்கிரகாளியம்மன் கோயிலில் பவுர்ணமி ஜோதி வழிபாடு
X

குமாரபாளையம் அருகே எல்லை மாரியம்மன் கோவில் வீதியில் வக்கிரகாளியம்மன் சித்தர் பீடத்தில் பவுர்ணமி ஜோதி வழிபாட்டில் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்தார்.

குமாரபாளையம் அருகே எல்லை மாரியம்மன் கோவில் வீதியில் வக்கிரகாளியம்மன் சித்தர் பீடத்தில் பவுர்ணமி ஜோதி வழிபாடு நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை அடுத்து குமாரபாளையத்தில் தான் வக்கிரகாளியம்மன் சித்தர் பீடம் அமைக்கப்பட்டுள்ளதாக இதன் நிறுவன குழு தலைவர் மற்றும் அர்ச்சகர் முருகன் கூறியுள்ளார். மாதம் தோறும் பவுர்ணமி பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நேற்று பவுர்ணமியாதலால் காவேரி ஆற்றிலிருந்து தீர்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. கோவில் மேற்புறம் உள்ள ஜோதி மேடையில் கற்பூரங்களால் ஜோதி ஏற்றி வைக்கப்பட்டது. இந்த ஜோதியை பக்தர்கள் ஓம் சக்தி சரண கோஷத்துடன் வணங்கினர். பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story