குமாரபாளையத்தில்பூணூல் அணிதல், சவுண்டம்மன் திருவிழா

குமாரபாளையத்தில்பூணூல் அணிதல், சவுண்டம்மன் திருவிழா
X

குமாரபாளையம் சடையம்பாளையம் சவுண்டம்மன் கோவில் சார்பில் நடந்த பூணூல் அணிதல் மற்றும் சவுண்டம்மன் திருவிழா சக்தி அழைப்பு வைபவத்தில் வீரகுமாரர்கள் கத்தி போட்டவாறு அம்மனை அழைத்து வந்தனர்.

குமாரபாளையத்தில் பூணூல் அணிதல் மற்றும் சவுண்டம்மன் திருவிழா நடைபெற்றது.

குமாரபாளையம் சடையம்பாளையம் சவுண்டம்மன் கோவில் சார்பில் பூணூல் அணிதல் மற்றும் சவுண்டம்மன் திருவிழா ஆக. 1 கொடியேற்றம் மற்றும் காப்பு காட்டுதலுடன் துவங்கியது. நேற்று சக்தி அழைப்பு வைபவம் நடைபெற்றது.

இதில் வீரகுமாரர்கள் கத்தி போட்டவாறு அம்மனை அழைத்து வந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவில், ராஜ வீதி சவுண்டம்மன் கோவிலில் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு பூணூல் அணிதல் வைபவம் நடைபெற்றது. பாலக்கரை தங்க நட்சத்திர வீரகுமாரர்கள் சார்பில் சக்தி அழைப்பு வைபவம் நடைபெற்றது. இதில் அம்மனை வீரகுமாரர்கள் கத்தி போட்டவாறு அழைத்து வந்தனர்.

பாண்டுரங்கர் கோவிலில் பூணூல் அணிதல் விழா நடைபெற்றது.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings