குமாரபாளையத்தில் குளமாக மாறிய சாலைகள்; மக்கள் கடும் அவதி

குமாரபாளையத்தில் குளமாக மாறிய சாலைகள்; மக்கள் கடும் அவதி
X

குமாரபாளையம் சாலைகளில் குளம்போல் காட்சியளிக்கும் மழை நீர்.

குமாரபாளையத்தில் நடைமேடை பணிகளால் சாலைகள் குளமாக மாறியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குமாரபாளையம் பகுதி சேலம் சாலையில் கத்தேரி பிரிவு முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை வடிகால் அமைப்பு மற்றும் நடைமேடை அமைக்கும் பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், குமாரபாளையம் பகுதிகளில் நேற்று மதியம் 2 மணியளவில் கன மழை பெய்தது. இதனால் சேலம் சாலை உள்ளிட்ட பல சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. சேலம் சாலையில் ஒ.வி.கே. பெட்ரோல் பங்க், பஸ்கள் வெளியில் வரும் பகுதி, ஜே.கே.கே. பங்களா எதிரில், ஆனங்கூர் பிரிவு சாலை, சரவணா தியேட்டர் அருகில் உள்ளிட்ட நடைமேடை அமைத்த பகுதிகளில் மழைநீர் வடிகாலில் செல்வதற்கு வழியின்றி குளம் போல் தேங்கி நின்றது.

இதனால் சாலையில் சென்ற வாகனங்களால் தண்ணீர் தெறிக்க, அருகில் உள்ள வியாபார நிறுவனத்தார்கள், டூவீலர் மற்றும் நடந்து செல்வோர் மிகவும் பாதிக்கப்பட்டனர். மழை நின்ற பின் தேங்கிய மழைநீர் சேரும் சகதியுமாக மாறி, பெறும் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

எனவே நெடுஞ்சாலைத்துறையினர் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்தி, மழை நீர் சாலையில் தேங்காமல் தங்குதடையின்றி வடிகாலில் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
why is ai important to the future