குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் பொங்கல் விழா

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் பொங்கல் விழா
X

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் உள்ள புங்கமாரியம்மன் மற்றும் முத்து முனியப்பன் சுவாமிகளின் 32ம் ஆண்டு பொங்கல் விழாவுக்கு வந்தவர்களுக்கு, தினசரி காய்கறி மார்க்கெட் சங்கம் சார்பில் வரவேற்பு தரப்பட்டது.

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் உள்ள புங்கமாரியம்மன் மற்றும் முத்து முனியப்பன் சுவாமி 32ம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது.

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் உள்ள புங்கமாரியம்மன் மற்றும் முத்து முனியப்பன் சுவாமிகளின் 32ம் ஆண்டு பொங்கல் விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி, மார்க்கெட் வளாகம் முழுதும் தூய்மை படுத்தப்பட்டு வண்ண,வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

காவிரி ஆற்றுக்கு சென்று மேளதாளங்கள் முழங்க தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதில் மார்க்கெட் வியாபாரிகள் தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்தனர். புங்கமாரியம்மன் மற்றும் முத்து முனியப்பன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!