குமாரபாளையத்தில் பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம்
குமாரபாளையத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
குமாரபாளையத்தில் பொங்கல் விழாவை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் திருவிழா என்று பெரியோர்கள் கூறுவார்கள். அதன் அடிப்படையில், சூரியபகவான் விவசாயத்திற்கு மட்டுமில்லாமல் ஜவுளி தொழிலில் ஈடுபடும் மக்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பவர்.
சூரிய வெளிச்சம் இருந்தால் தான் கஞ்சி போட்ட நூல்கள், சாயம் போட்ட நூல்கள் நன்கு காய்ந்து நெசவு நெய்ய முடியும். ஆகவே கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களும் சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் திருநாளாக இந்த பொங்கல் திருநாள் அமைந்துள்ளது.
வீட்டின் முன்பு புதுப்பானையில் பொங்கலிட்டு, தலைவாழை இலை போட்டு, சர்க்கரை பொங்கல், தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, கரும்புகள், மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் படைத்து, சூரிய பகவானை வழிபட்டனர்.
அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு பொங்கல், கரும்பு வழங்கி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். இது போன்ற விழாக்கள் ஒருவருக்கொருவர் கொடுத்து உதவும் தன்மையை வளரச் செய்கிறது என்றால் அது மிகையல்ல.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu