பொங்கல் பண்டிகை: குமாரபாளையம் மார்க்கெட்டில் மக்கள் வெள்ளம்

குமாரபாளையம் சந்தையில், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களை வாங்க குவிந்த மக்கள்.
பொங்கல் விழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக, பொங்கல் பண்டிகையை கொண்டாட தேவையான மஞ்சள் கொம்பு, கரும்பு, பூஜை பொருட்கள், பூக்கள், வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வாங்க தினசரி மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்தனர்.
மஞ்சள் கொம்பு ஒன்று 25:00 ரூபாய்க்கும், கரும்பு ஒன்று 50:00 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. பூக்கள் விலை, காய்கறிகள் விலை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. ஆயினும் பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டும் என்பதால் விலை உயர்வை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பொருட்களை வாங்கி சென்றதை காண முடிந்தது.
நாளை மாட்டுப்பொங்கல் என்பதால் மாட்டுக்கு தேவையான கயிறு வகைகள், சலங்கை பெல்ட்டுகளை விவசாயிகள் பெரும்பாலோர் குமாரபாளையம் மார்க்கெட்டில் வாங்கிச் சென்றனர். சாலையோர துணிக்கடைகளில் ஏழை, எளிய மக்கள் தங்கள் வசதிக்கு தகுந்தாற்போல் தங்கள் குழந்தைகளுக்கு ஜவுளிகளை ஆர்வமுடன் வாங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu