விசைத்தறி தொழிளாளர்களுக்கான பொங்கல் போனஸ் பேச்சுவார்த்தை ஜன.11க்கு ஒத்திவைப்பு

விசைத்தறி தொழிளாளர்களுக்கான பொங்கல் போனஸ் பேச்சுவார்த்தை  ஜன.11க்கு ஒத்திவைப்பு
X

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் பகுதியில் விசைத்தறி தொழிளாளர்களுக்கான போனஸ் குறித்து தாசில்தார் தமிழரசி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிளாளர்களுக்கான பொங்கல் போனஸ் பேச்சுவார்த்தை ஜன.11க்கு ஒத்திவைக்கப்பட்டது.

குமாரபாளையம் பகுதியில் விசைத்தறி தொழிளாளர்களுக்கு 2020-2021ம் ஆண்டிற்கு 20 சதவீத போனஸ், கூலி உயர்வு கேட்டு ஜனநாயக விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் தாசில்தாருக்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

அதன்படி நேற்று மாலை 03:00 மணியளவில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் தமிழரசி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜனநாயக விசைத்தறி தொழிலாளர் சங்கம், கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்கம், நாமக்கல் மாவட்ட கூலிக்கு நெசவு நெய்யும் விசைத்தறியாளர்கள் சங்கம், ஆகிய நிர்வாகிகளுக்கு தாலுக்கா அலுவலகம் சார்பில் தகவல் அனுப்பப்பட்டது. ஜனநாயக விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட பொது செயலர் சுப்ரமணி, நிர்வாகிகள் மாணிக்கம், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் வந்தனர்.

தாசில்தார், போலீசார், வருவாய்த்துறையினர் அனைவரும் வந்து காத்திருந்தனர். ஆனால் கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்கம், நாமக்கல் மாவட்ட கூலிக்கு நெசவு நெய்யும் விசைத்தறியாளர்கள் சங்கத்தினர் வரவில்லை.

இதுகுறித்து கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் கூறுகையில், பேச்சுவார்த்தைக்கு காலை 11:00 தான் தகவல் தந்தனர். அப்போது வெளியூரில் இருந்தோம். அதனால் பங்கேற்க இயலவில்லை. ஜன. 10ல் கொங்கு சங்க கட்டிடத்தில் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அதில் கலந்து பேசி முடிவை சொல்வதாக கூறியுள்ளோம் என தெரிவித்தார்.

இதனையடுத்து குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிளாளர்களுக்கான பொங்கல் போனஸ் பேச்சுவார்த்தை ஜன.11க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தாலுகா அலுவலக வட்டாரம் தெரிவித்துள்ளது.

தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எஸ்.ஐ.க்கள் மலர்விழி, முருகேசன், ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ. முருகன், தொழிற்சங்கம் சார்பில் சுப்பிரமணி, மாணிக்கம், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai based healthcare startups in india