குமாரபாளையம் அரசு பள்ளியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விழிப்புணர்வு முகாம்

குமாரபாளையம் அரசு பள்ளியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விழிப்புணர்வு முகாம்
X

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாசுக்கட்டுபாட்டு வாரியம் சார்பில் நடந்த விழிப்புணர்வு முகாமில் உதவி பொறியாளர் கிருஷ்ணன் மாணவர்கள் அனைவருக்கும் துணிப்பைகளை வழங்கினார்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

பள்ளிக்கல்வித்துறை, தேசிய பசுமைப்படை சார்பில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவர்கள் சார்பில் நீர் மாசுபடுவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதையடுத்து மாசுக்கட்டுபாட்டு வாரிய விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இதில் உதவி பொறியாளர் கிருஷ்ணன் பேசுகையில், காவிரி நீர் தூய்மையாக வைத்துகொள்ள வேண்டும். அதற்கு காவிரி நீரை மாசு படுத்தக்கூடாது. அவ்வாறு மாசு படுத்துவோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாணவர்களாகிய நீங்கள் வீட்டில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து நகராட்சி ஊழியர்களிடம் வழங்க சொல்ல வேண்டும், நீங்களும் பொது இடங்களில் அசுத்தம் செய்யக்கூடாது. பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்படுத்தாமல் துணி பைகளை நீங்கள் பயன்படுத்துவதுடன், உங்கள் வீட்டில், நண்பர்கள், உறவினர்களிடமும் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாணவர்கள் அனைவருக்கும் துணிப்பைகளை மாசுக்கட்டுபாட்டு வாரிய உதவி பொறியாளர் கிருஷ்ணன் வழங்கினார். தலைமை ஆசிரியர் ஆடலரசு, தேசிய பசுமைப்படை ரகுநாத், என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story