குமாரபாளையத்தில் ஜன.31ல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

குமாரபாளையத்தில்  ஜன.31ல்   வாக்குச்சாவடி   அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
X

பயிற்சி முகாம் நடைபெற உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறைகள் தூய்மை படுத்தபட்டு, இருக்கைகள் அமைக்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

குமாரபாளையத்தில் ஜன. 31ல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலாக அனைத்து பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. குமாரபாளையம் நகராட்சியில் வேட்பாளர்களிடம் வேட்புமனு பெற இருநாட்களாக அலுவலர்கள் காத்திருந்தும் வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இன்று தை அமாவாசை நாள் என்பதால் இன்று வேட்புமனு தாக்கல் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தேர்தல் பணிகளை மேற்கொள்ளவிருக்கும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஜன. 31ல் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

இதில் 260க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் பங்கேற்கவுள்ளதாக நகராட்சி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். இதற்காக பயிற்சி முகாம் நடைபெற உள்ள அறைகள் தூய்மை படுத்தபட்டு, இருக்கைகள் அமைக்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Tags

Next Story
photoshop ai tool