குமாரபாளையத்தில் தயார் நிலையில் ஓட்டுச்சாவடி மையங்கள்
குமாரபாளையத்தில் ஓட்டுச்சாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
குமாரபாளையத்தில் ஓட்டுச்சாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. தமிழக உள்ளாட்சி தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டது முதல் வேட்புமனு தாக்கல், பரிசீலனை, திரும்ப பெறுதல், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு, கேட்ட சின்னங்கள் கிடைக்காததால் நள்ளிரவு வரை நகராட்சி கமிஷனர் அறை முன் சுயேச்சை வேட்பாளர்கள் காத்திருப்பு, வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம், ஒட்டு எண்ணிக்கையை திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் வைக்க வேட்பாளர்கள் கடும் எதிர்ப்பு, ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி, பூத் சிலிப் வழங்கும் பணி ஆகியன நடைபெற்றன.
இதையடுத்து, 78 ஓட்டுச்சாவடி மையங்களில் சேர்கள், டேபிள்கள் அமைத்தல், மின் விளக்கு வசதி அமைத்தல், சி.சி.டி.வி. கேமரா பொருத்துதல், வாக்காளர்கள் வரிசையில் நிழலில் நின்று வாக்களிக்க எதுவாக சாமியானா அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்றன. இந்த பணிகளை நகராட்சி கமிஷனர் சசிகலா, பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் ஆய்வு செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu