தடுப்பூசி முகாம்களில் அரசியல் கட்சியினர் குறுக்கீடு, தவிக்கும் பொதுமக்கள்
செங்குட்டைபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், அதிகாலை முதலே தடுப்பூசி போட குவிந்திருக்கும் பொதுமக்கள்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தடுப்பூசிகளாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு வகையான தடுப்பூசிகள் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவனை, மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழங்கபட்டு வருகின்றன.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு மையங்களில் வழங்கப்பட்டு வரும் நிலையில் பள்ளிபாளையம் ஒன்றியம், சமயசங்கிலி ஊராட்சிக்குட்பட்ட, செங்குட்டைபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று 150 நபர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் வரிசையில் காத்திருந்த நிலையில்,அங்கு வந்த உள்ளூர் அரசியல் கட்சியினர் சிலர் உள்ளூர்காரர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் போடப்படும் எனவும், செங்குட்டைபாளையம் பகுதியை தவிர்த்து அருகிலுள்ள ஆவத்திபாளையம், குப்பாண்டபாளையம், களியனூர், எளையம்பாளையம், சின்னார்பாளையம்,உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் மக்களுக்கு ஊசிகள் இல்லையென தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிகாலை முதலே காத்திருந்த பொதுமக்கள்,உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்கள்,மற்றும் மருத்துவ ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு அங்கு வந்த மருத்துவ அதிகாரிகள்,உள்ளூர் பிரமுகர்கள், பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.
இது குறித்து பொது மக்களில் ஒரு சிலர் கூறும்போது, பள்ளிபாளையத்தில் உள்ள பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி பட்டியலில் தெரிவித்துள்ள படி முழுமையாக தடுப்பூசிகள் போடப்படுவதில்லை. உள்ளூர் ஆளுங்கட்சியினர், மற்றும் எதிர்கட்சியினர் என இரு தரப்பினருமே தடுப்பூசி டோக்கன் வழங்குவதில் தலையீடு செய்கின்றனர். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ,தங்களுக்கு முக்கிய மாணவர்களுக்கு, என தடுப்பூசிகளை பதுக்குவதால் அதிகாலை முதலே காத்திருக்கும் நாங்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருவதால் தமிழக தமிழக அரசு உடனடியாக அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் தடுப்பூசிகள் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும்.
மேலும், திருப்பூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடியில் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளும் முறையை அறிமுகபடுத்தியுள்ளதை போல இங்கேயும் ஏற்படுத்தினால் மிகுந்த பயனளிக்கும் எனவும் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu