குமாரபாளையம் வார்டுகளில் அதிமுக, திமுக தேர்தல் அலுவலகங்கள் திறப்பு

குமாரபாளையம் தம்மண்ணன் வீதியில் தி.மு.க., அ.தி.மு.க. அலுவலகங்கள் அருகருகே அமைக்கப்பட்டுள்ளன.
தமிழக உள்ளாட்சி தேர்தல் பணிகள் அனைத்து பகுதியிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குமாரபாளையம் நகராட்சியில், வேட்புமனு தாக்கல், பரிசீலனை, வேட்புமனு திரும்ப பெறுதல், சுயேச்சை வேட்பாளர்கள் சின்னங்கள் ஒதுக்கீடு, இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு ஆகியன நடைபெற்று, அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
ஓட்டுப்பதிவு மெசின்கள் தருவித்தல், ஸ்ட்ராங் ரூம் இல் பத்திரப்படுத்துதல், 73 ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தேவையான வசதிகள், ஓட்டுப்பதிவு நடந்திட தேவையான டேபிள்கள், சேர்கள் அமைத்தல், மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோல் வேட்பாளர்கள் தங்களது வார்டுகளில் தேர்தல் அலுவலகங்கள் அமைத்து பிரச்சார பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள். ஒருசில இடங்களில் தி.மு.க., அ.தி.மு.க. அலுவலகங்கள் அருகருகே கூட அமைக்கப்பட்டுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu