/* */

ஊரடங்கு: கண்டுகொள்ளாத குமாரபாளையம் மக்கள்

குமாரபாளையத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தாலும் மக்கள் அதை கவனத்தில் கொள்ளாமல் ஊரடங்கு காலத்திலும் வெளியே சுற்றி வருகின்றனர்

HIGHLIGHTS

ஊரடங்கு: கண்டுகொள்ளாத குமாரபாளையம் மக்கள்
X

கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் உள்ளது அதனால் குமாரபாளையத்தில் உள்ள முக்கிய சாலைகளில் குமராபாளையம் காவலர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அத்தியாவசிய தேவைகளை தவிர தேவையின்றி வருகிறவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் மழை காலத்திலும் காவல் பணியில் காவலர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தாலும் பொதுமக்கள் மிக அலட்சியமாக தேவையின்றி சாலையில் சுற்றித் திரிவதாக சமூக நல ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர் நாமக்கல் மாவட்டம் கொரோனா பாதிப்பு அதிகம் காரணமாக தமிழக அரசால் சிவப்பு குறியீடு பகுதியாக உள்ள அறிவிக்கபட்டுள்ள நிலையில் பொதுமக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டுமாய் காவல்துறை சார்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 6 Jun 2021 1:48 AM GMT

Related News