குமாரபாளையத்தில் திருநங்கைகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம்

குமாரபாளையத்தில் திருநங்கைகளுடன் போலீசார்   ஆலோசனை கூட்டம்
X

குமாரபாளையத்தில் திருநங்கைகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் நடைபெற்றது.

திருநங்கைகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் நடைபெற்றது.

திருநங்கைகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் திருநங்கைகளிடம் பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள்? என்னென்ன குறைகள் உள்ளன? தேவையான உதவிகள் என்னென்ன? என்பது உள்ளிட்ட பல கருத்துக்கள் கேட்கப்பட்டன.

இது பற்றி திருநங்கைகள் சங்க தலைவி மாதம்மாள் கூறியதாவது: எங்களுக்கு தி.மு.க. அரசு சார்பில் ரேசன் கார்டு, ஆதார் கார்டு, நலவாரிய அட்டை, வாக்காளர் அட்டை, மருத்துவ காப்பீடு உள்ளிட்டவைகள் கிடைக்க அனைத்து உதவிகளையும் செய்து தருகிறார்கள். சமுதாயத்தில் நல்ல மதிப்பு கிடைத்து வருகிறது. தனியார் நிறுவனங்களில் வேலை மறுக்கப்படுகிறது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதால் அரசு சார்பில் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ்களில் இருக்கைகள் ஒதுக்கி தர வேண்டும். நங்கள் குமாரபாளையத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறோம். மாவட்ட தலைநகரான நாமக்கல்லில் எங்களுக்கு சுய தொழில் செய்ய பயிற்சி வழங்க இருப்பதாக அங்கு வர சொல்லி அழைக்கிறார்கள்.

ஆனால் நாங்கள் மாவட்ட எல்லையில் இருப்பதால், போதிய பஸ் வசதி இல்லாததால் அங்கு சென்று பயிற்சி பெற முடிவதில்லை. குமாரபாளையத்தில் தாலுகா அலுவலகம் இருப்பதால், நாங்கள் உள்ளூரிலேயே பயிற்சி பெற விரும்புகிறோம். ஆகவே இதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் பங்கேற்கும் பல நிகழ்ச்சிகளில் எங்களை கலந்து கொள்ளவும், சான்றிதழ் பெற்றுக்கொள்ள சொல்லியும் நாமக்கல் வர சொல்கிறார்கள். இது பற்றி பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. அது போன்ற சமயங்களில் மாவட்ட கலெக்டர் குமாரபாளையம் நேரில் வந்தோ அல்லது தாசில்தார் மூலமாகவோ எங்களுக்கு வழங்க கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story