குமாரபாளையம்: சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கல் -காவல்துறை பறிமுதல்..!

குமாரபாளையம்: சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கல் -காவல்துறை பறிமுதல்..!
X
மது விற்பனை செய்வதற்காக பாட்டில்கள் பதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

நாமக்கல் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தமிழக அரசு தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை திறக்க தடைவிதித்துள்ளது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பட்டத்தரசியம்மன் கோவில் அருகே வசிக்கும் ஒருவரின் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கப்பட்டிருப்பதாக குமராபாளையம் காவல்துறையினருக்குத தகவல் வந்தது. அடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1816 மது மதுபாட்டில்களை அதிரடியாக பறிமுதல் செய்து மேல் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் குமாரபாளையம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!