விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடும் போலீசார்
X
பைல் படம்.
By - K.S.Balakumaran, Reporter |30 Sept 2021 4:30 PM IST
குமாரபாளையத்தில் இளைஞர் விபத்துக்கு காரணமான வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
குமாரபாளையம் காலனி மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே கோழி இறைச்சி கடையில் பணியாற்றி வந்தவர் ஸ்ரீகாந்த், 25. இவரது சொந்த ஊர் ஓசூர் என்று கூறப்படுகிறது. இவர் கடந்த 6 மாதம் முன்புதான் இந்த கடையில் பணிக்கு சேர்ந்துள்ளார். இரு நாட்கள் முன்பு வட்டமலை தனியார் கல்லூரி எதிரில் சேலம் கோவை புறவழிச் சாலையை நடந்து கடந்துள்ளார். அப்போது சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் மோதியதில், படுகாயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை செய்து நடத்தி வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu