குமாரபாளையம் அருகே மூதாட்டியை மீட்டு காப்பகத்தில் சேர்த்த பெண் போலீஸ்

குமாரபாளையம் அருகே மூதாட்டியை மீட்டு காப்பகத்தில் சேர்த்த பெண் போலீஸ்
X

குமாரபாளையம் வட்டமலை ஜே.கே.கே.நடராஜா கல்லூரி பின்புறம் சத்யா நகரில் நிர்வாகி ஹேமமாலினி தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் அன்னை ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் தங்கி வாழ்ந்து வரும் முதியோர்கள், ஆதரவற்ற நபர்கள் 38 நபர்களுக்கு புத்தாடைகளும், இனிப்புகளும், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களையும் பவானி பெண் போலீஸ் அனந்தவள்ளி வழங்கி உதவினார்.

குமாரபாளையம் அருகே பெண் போலீஸ் ஒருவர் மூதாட்டியை மீட்டு காப்பகத்தில் சேர்த்தார்.

பவானி போலீசில் பணியாற்றி வருபவர் ஆனந்தவள்ளி, 34. இவர் பணிக்கு வரும்போது பவானி காவேரி பாலத்தின் மீது மூதாட்டி ஒருவர் அழுதபடி நின்று கொண்டிருந்தார்.

இதனை கண்ட பெண் போலீஸ் அவரிடம் விபரம் கேட்க, தன் பெயர் செல்லாயம்மாள், 76, என்பதும், தன்னை தன் பிள்ளைகள் தவிக்க விட்டதாகவும், ஆதரவில்லாமல் இருப்பதாகவும் கூறியுள்ளார். இவரை குமாரபாளையம் வட்டமலை ஜே.கே.கே.நடராஜா கல்லூரி பின்புறம் சத்யா நகரில் நிர்வாகி ஹேமமாலினி தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் அன்னை ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் பெண் போலீஸ் சேர்த்து விட்டார்.

மேலும் அங்கு தங்கி வாழ்ந்து வரும் முதியோர்கள், ஆதரவற்ற நபர்கள் 38 நபர்களுக்கு புத்தாடைகளும், இனிப்புகளும், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களையும் பெண் போலீஸ் அனந்தவள்ளி வழங்கி உதவினார்.

இந்த காப்பகத்திற்கு உதவ விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் : 9944871202.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!