குமாரபாளையத்தில் சைபர் கிரைம் குறித்து போலீசார் விழிப்புணர்வு

குமாரபாளையத்தில் சைபர் கிரைம் குறித்து போலீசார் விழிப்புணர்வு
X

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் சைபர் கிரைம் குறித்து போலீசார் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சமீப காலமாக வங்கி கணக்கிலிருந்து திருடப்படுவது உள்ளிட்ட ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக போலீசார் சார்பில் உதவி எண் மற்றும் இணைய முகவரி அறிமுகப்படுத்தப்பட்டது.

இது குறித்து விழுப்புணர்வு நிகழ்வு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, காவேரி நகர், ராஜம் தியேட்டர், நாராயண நகர் உள்ளிட்ட நகரின் பல இடங்களில் நடைபெற்றது.

இன்ஸ்பெக்டர் ரவி பேசுகையில், வங்கி கணக்கு சம்பந்தமான யார் விபரங்கள் கேட்டாலும் தரக்கூடாது, ஏ.டி.எம்.செல்லும் பொதுமக்கள் அறிமுகம் இல்லாத நபர்களிடம் ரகசிய என்னை கூறி பணம் எடுத்து தர சொல்லக்கூடாது, ஏ.டி.எம் அட்டைகளில் ரகசிய எண்ணை எழுதி வைக்கக்கூடாது. போலீஸ் அவசர உதவிக்கு 1930 என்ற எண்ணுக்கும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் செய்யலாம்.

இவ்வாறு பேசினார்.

பொதுமக்களுக்கு இது குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எஸ்.ஐ.க்கள் மலர்விழி, நந்தகுமார், சிவகுமார், முருகேசன், மோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!