தீபாவளி அசம்பாவிதம் தவிர்க்க பழைய குற்றவாளி வீடுகளில் போலீசார் சோதனை
குமாரபாளையத்தில் தீபாவளி அசம்பாவிதம் தடுக்க பழைய குற்றவாளிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
தீபாவளி சமயத்தில் எவ்வித குற்ற சம்பவங்களும் நடக்க கூடாது என்பதற்காக பழைய குற்றவாளிகளின் வீடுகளுக்கு குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
தீபாவளி சமயத்தில் எவ்வித குற்ற சம்பவங்களும் நடக்க கூடாது என பழைய குற்றவாளிகள் வீடுகளுக்கு குமாரபாளையம் போலீசார் நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என நாமக்கல் மாவடட எஸ்.பி. உத்தரவிட்டார். அதன்படி குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.க்கள் தங்கவடிவேல், சந்தியா, முருகேசன், குணசேகரன் உள்ளிட்ட போலீசார், காவேரி நகர், காந்தியடிகள் தெரு, அய்யம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கொலை மற்றும் இதர முக்கிய வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் 16 நபர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று, சம்பந்தப்பட்டவர்களை அறிவுறுத்தி வந்தனர். இந்த ஆய்வு மேலும் தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.
குமாரபாளையத்தில் நடந்த கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம் நாராயண நகர் பகுதியில் வசித்தவர் கார்த்திகேயன் (வயது 38.) எலெக்ட்ரீசியன். இவருடன் இவரது நண்பர்களான தனபால், அரை பச்சை ஆகிய மூவரும் சேர்ந்து மது குடிப்பது வழக்கம் என கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் இரவு 09:30 மணியளவில் மேற்படி மூவரும் பள்ளிபாளையம் சாலை தாலுகா அலுவலக பிரிவு சாலை பூக்கடை அருகே குடித்து விட்டு, தகறாறு செய்து கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த கார்த்திகேயன் தம்பி சந்தோஷ்குமார்,( 30,) மூவரையும் சமாதானப்படுத்தி அண்ணனை அழைத்துக்கொண்டு, மற்ற இருவரையும் அனுப்பி வைத்தார். அப்போது தனபால், அரை பச்சை ஆகிய இருவரும் இன்று இரவுக்குள் உன்னை கழுத்து அறுத்து கொல்லாமல் விடமாட்டோம், என்று கூறி சென்றதாக தெரிகிறது.
நேற்று அதிகாலை 03:30 மணியளவில் மணிகண்டன் என்பவர் சந்தோஷ்குமார் வீட்டின் கதவை தட்ட, எழுந்து வந்த சந்தோஷ்குமாரிடம், கார்த்திகேயன் கழுத்து அறுபட்ட நிலையில் உள்ளார் என்று சொன்னார். நேரில் சென்று பார்த்த சந்தோஷ்குமார் இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதன்படி வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் தலைமறைவான தனபால், அரை பச்சை ஆகிய இருவரையும் தேடி வந்தனர்.
இன்ஸ்பெக்டர் தவமணி உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு குற்றாளிகளை தேடி வந்தனர். காவேரி நகர் பாலம் பிரிவு சோதனை சாவடி பஸ் நிறுத்தம் பகுதியில் தனபால் நின்று கொண்டிருக்க, அங்கு சென்று அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். போலீசார் விசாரணையில், தன் குடும்பத்தார் பற்றி தரக்குறைவாக பேசியதால் கொலை செய்ததாக கூறியதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் அரை பச்சை என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu