குமாரபாளையம் அருகே பார்களில் போலீசார் சோதனை: 97 மது பாட்டில்கள் பறிமுதல்

குமாரபாளையம் அருகே பார்களில் போலீசார் சோதனை: 97 மது பாட்டில்கள் பறிமுதல்
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் அருகே உள்ள பார்களில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் 97 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

குமாரபாளையம் பகுதியில் உள்ள பார்களில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பதாக ரகசிய தகவல் குமாரபாளையம் போலீசாருக்கு கிடைத்தது. நேற்று மாலை 02:00 மணியளவில் இரு பிரிவாக சென்ற குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் இரு பிரிவாக சென்று சோதனை செய்தனர்

அதில் அருவங்காடு பார், பள்ளிபாளையம் பிரிவு சாலையில் உள்ள பார் ஆகியவற்றில் அதிக விலைக்கு மது விற்பது தெரியவந்தது. கையும் களவுமாக பிடிபட்ட இருவரை கைது செய்து, 97 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சாரணையில் பிடிபட்டவர்கள் குமாரபாளையம், மேற்கு காலனியை சேர்ந்த கனகராஜ், 26, பிரேம்குமார், 34, என்பது தெரியவந்தது. இவர்களிடம் போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ai based agriculture in india