கொரோனா தடுப்பு நடவடிக்கை: காவிரி கரைகளில் காவலுக்கு நின்ற போலீசார்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: காவிரி கரைகளில் காவலுக்கு நின்ற போலீசார்
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் உள்ள காவிரி படித்துறையில் பொதுமக்கள் அத்துமீறி நுழையாதபடி கயிறு கட்டப்பட்டு இருந்தது. 

குமாரபாளையத்தில் உள்ள காவிரி கரையோரப்பகுதிகளில் போலீசார் காவல் இருந்தனர்.

குமாரபாளையத்தில் உள்ள காவிரி கரையோரப்பகுதிகளில் போலீசார் காவல் இருந்தனர்.

ஆடி அமாவாசை நாள் என்பதால் பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு வந்து புனித நீராடுதல், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தல் உள்ளிட்ட பணிகளை செய்வார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காவிரி ஆற்றில் குளிக்கவோ, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவோ அனுமதி மாவட்ட கலெக்டரால் மறுக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் கூடாதிருக்கும் வகையில் காவிரி கரையோரப்பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். படிக்கட்டு இறங்கும் இடம் முன்பாக கயிறு கட்டி யாரும் அத்துமீறி செல்லக்கூடாது என அறிவுறுத்திக் கொண்டு இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!