குமாரபாளையம் உள்ளாட்சி தேர்தலையொட்டி போலீசார் அணிவகுப்பு

குமாரபாளையம் உள்ளாட்சி தேர்தலையொட்டி போலீசார் அணிவகுப்பு
X

குமாரபாளையம் உள்ளாட்சி தேர்தலையொட்டி போலீசார் விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்தினர்.

குமாரபாளையம் உள்ளாட்சி தேர்தலையொட்டி போலீசார் விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்தினர்.

குமாரபாளையம் நகராட்சி தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் வந்தால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் என மக்கள் அச்சத்தில் இருந்து வருவார்கள்.

பொதுமக்களின் இந்த அச்சத்தை போக்கும் வகையில் போலீசார் பொதுமக்களுக்கு தைரியத்தை வரவழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திட அணிவகுப்பு நடத்துவது வழக்கம். வருகிற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குமாரபாளையம் போலீசார் போலீஸ் ஸ்டேஷனில் தொடங்கி, இடைப்பாடி சாலை, சேலம் உள்ளிட்ட பல சாலைகளின் வழியாக அணிவகுத்து வந்தனர். மீண்டும் போலீசார் அணிவகுப்பு போலீஸ் ஸ்டேஷனில் நிறைவு பெற்றது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு