பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை தேடும் போலீசார்!

பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை தேடும் போலீசார்!
X
குமாரபாளையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை போலீசார் தேடு வருகின்றனர்.

பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை தேடும் போலீசார் - குமாரபாளையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை போலீசார் தேடு வருகின்றனர்.

குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி, சத்யா நகர் பகுதியில் வசிப்பவர் கோவிந்தராஜ், 42. கட்டிட கூலி. நேற்றுமுன்தினம் இரவு 11:00 மணியளவில், கோவிந்தராஜ், மனைவி பாரதி, மகன் திருமால், தங்கை ஆதிலட்சுமி ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டின் வெளியில் டமால் என்று வெடி சத்தம் கேட்டது. வெளியில் வந்து பார்த்த போது, வெளியில் கேட் அருகே தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அருகே பாட்டில் உடைந்த துகள்கள் சிதறி கிடந்தது. இரண்டு மாதம் முன்பு கிர்க்கெட் விளையாடும் போது, திருமால் மற்றும் அவரது நண்பர்கள் மூவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் திருமாலை அவர்கள் மிரட்டி வந்துள்ளனர். இவர்கள் செய்த காரியமாக இருக்கலாம் என்று எண்ணி, கோவிந்தராஜ் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!