குமாரபாளையத்தில் விபத்துக்களை தடுக்க போலீசார் ஆய்வு

குமாரபாளையத்தில் விபத்துக்களை தடுக்க போலீசார் ஆய்வு
X

குமாரபாளையத்தில் விபத்துக்களை தடுக்க போலீசார் ஆய்வு செய்தனர்.

குமாரபாளையத்தில் விபத்துக்களை தடுக்க போலீசார் ஆய்வு செய்தனர்.

குமாரபாளையத்தில் விபத்துக்களை தடுக்க போலீசார் ஆய்வு செய்தனர்.

குமாரபாளையம் சேலம் - கோவை புறவழிச்சாலையில் விபத்துக்கள் தடுக்க இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. நந்தகுமார் உள்ளிட்ட போலீசார் கத்தேரி பிரிவு, டீச்சர்ஸ் காலனி, ஜே.கே.கே. நடராஜா கல்லூரி பிரிவு, எஸ்.எஸ்.எம் கல்லூரி பிரிவு, அருவங்காடு பிரிவு, பல்லக்காபாளையம் பிரிவு , உள்ளிட்ட பல இடங்களில் வேகமாக வரும் வாகனங்கள், வேகத்தை கட்டுப்படுத்த டிவைடர்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரவி கூறியதாவது:- மாவட்ட போலீஸ் எஸ்.பி. அறிவுறுத்தல்படி விபத்து அடிக்கடி ஏற்படும் இடங்களில் டிவைடர்கள் அமைக்க இடம் ஆய்வு செய்யப்பட்டது. போக்குவரத்து போலீசாரும், புறவழிச்சாலை ரோந்து வாகன போலீசாரும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!