/* */

தேர்தலை அமைதியாக நடத்த குமாரபாளையத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு

தேர்தலை அமைதியாக நடத்தும் நோக்கில் குமாரபாளையத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.

HIGHLIGHTS

தேர்தலை அமைதியாக நடத்த குமாரபாளையத்தில் போலீசாரின் கொடி   அணிவகுப்பு
X

குமாரபாளையத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.

குமாரபாளையத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.

ஈரோடு லோக்சபா தொகுதியில் நாமக்கல் மாவட்ட காவிரி கரையோர குமாரபாளையம் தொகுதியும் அடங்கும். குமாரபாளையம், பள்ளிபாளையம் இரு நகராட்சிகளை கொண்ட குமாரபாளையம் தொகுதியில் லோக்சபா தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சியினர் செய்து வருகிறார்கள். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.

ஈரோடு தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் தொகுதியில், தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு பேரணி, துண்டு பிரசுரம் விநியோகம், பூத் சிலிப் வழங்குவதற்கான பணிகள், ஆகியன செயல்படுத்தி வருகிறார்கள். லோக்சபா தேர்தலில் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் ஓட்டுப்பதிவு செய்யும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் குமாரபாளையம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. போலீசாரும் தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள்.

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 279 ஓட்டுப்பதிவு மையங்களில் பாதுகாப்பு வசதி, உள்ளிட்டவைகளை நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் நேரில் பார்வையிட்டு, ஓட்டுச்சாவடி அருகில் உள்ள வீடு, கடைகள், ஆகிவற்றை கண்காணித்து தகவல் சேகரிக்க வேண்டும், பாதுகாப்பு பணிகள் உறுதி செய்திட வேண்டும் என ஆலோசனை வழங்கினார். இதன் ஒரு கட்டமாக பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டு பதிவு செய்திட வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கொடி அணிவகுப்பு நடந்தது. எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் உத்தரவுப்படி, ஏ.டி.எஸ்.பி. செல்வராஜ், டி.எஸ்.பி. இமயவரம்பன் தலைமையில், காவேரி நகர், காவேரி பாலம் பிரிவு பகுதியில் தொடங்கி, எடப்பாடி சாலை, சேலம் சாலை வழியாக ராஜம் தியேட்டர் முன்பு நிறைவு பெற்றது. வழி நெடுக பொதுமக்கள் கொடி அணிவகுப்பை பார்வையிட்டனர்.

Updated On: 4 April 2024 2:23 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  5. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  8. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  9. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  10. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி