குமாரபாளையத்தில் போலீசார் நடத்திய விழிப்புணர்வு அணிவகுப்பு

குமாரபாளையத்தில் போலீசார் நடத்திய  விழிப்புணர்வு அணிவகுப்பு
X

குமாரபாளையம் போலீசார் உள்ளாட்சி தேர்தலையொட்டி விழிப்புணர்வு கொடி அணிவகுப்பை குமாரபாளையம் போலீசார் நடத்தினர்.

உள்ளாட்சி தேர்தலையொட்டி, குமாரபாளையத்தில் போலீசார் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பை நடத்தினர்.

குமாரபாளையம் நகராட்சி தேர்தலையொட்டி பொதுமக்களின் இந்த அச்சத்தை போக்கும் வகையில், போலீசார் பொதுமக்களுக்கு தைரியத்தை வரவழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அணிவகுப்பு நடத்துவது வழக்கம். வருகிற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், குமாரபாளையம் போலீசார், காவல் நிலையம் அருகே தொடங்கி, இடைப்பாடி சாலை, சேலம் உள்ளிட்ட பல சாலைகளின் வழியாக அணிவகுத்து வந்தனர். மீண்டும் போலீசார் அணிவகுப்பு, காவல் நிலையத்தில் நிறைவு பெற்றது.

இது பற்றி இன்ஸ்பெக்டர் ரவி கூறுகையில், பொதுமக்கள் அச்சமில்லாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு தெரியபாதும் விதமாக கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை வேளைகளில், ஒவ்வொரு வார்டாக கொடி அணிவகுப்பு நடத்தி வருகிறோம் என்றார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி