குமாரபாளையத்தில் போலீசாரின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையம் போலீசார் சார்பில் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் சுற்று சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் போலீசார் சார்பில் சுற்று சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
நகராட்சி அலுவலகம் முன்பு துவங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று ஆனங்கூர் பிரிவில் நிறைவு பெற்றது. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாதைகள் கைகளில் ஏந்தியவாறும், துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகித்தவாறும், கோஷங்கள் போட்டவாறும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் சென்றனர்.
இதில் இன்ஸ்பெக்டர் ரவி பேசுகையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் குற்ற சம்பவங்கள் குறித்து பேசி, அதனை தடுக்கும் வழிமுறைகள், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், போக்சோ குறித்த சட்ட திட்டங்கள், அதனை புகார் வழங்கும் முறை, தண்டனை விபரங்கள் குறித்து பேசினார்.
இதில் எஸ்.ஐ.க்கள் மலர்விழி, நந்தகுமார், எஸ்.எஸ்.ஐ.க்கள் சிவகுமார், தன்ராஜ், மோகன், இளமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu